Translate

Monday, 26 March 2012

ஐ.நா பாதுகாப்புச் சபையில் பிரேரணை நிறைவேற்றினால் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கலாம்

இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையைக் கொண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புச் சபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டாலே அவ்வாறு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற 19வது மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்த சமரசிங்க தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

No comments:

Post a Comment