வெள்ளை இனத்தவர்கள் முகம் சுடுநீரில் வெந்துபோன பரங்கிக்காயாம் !

அதுமட்டுமல்லாது வெள்ளை இனத்தவர்களின் முகம் சுடு நீரில் வெந்துபோன பரங்கிக்காய் போன்றது என்று மேற்குலகையும் அவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அமைச்சரின் இக்கருத்து தொடர்பில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பதில் ஊடகத்துறை அமைச்சர், ஊடகவியலாளர்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் விடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார். அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவருடைய கருத்துபடி ஏதாவது குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கடந்தகாலங்களில் மேர்வின் சில்வா ஒரு ஊடகவியலாளரைக் கட்டிவைத்து அடித்ததும், பல வன்செயல்களில் ஈடுபட்டதும் யாவரும் அறிந்ததே. ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இலங்கைப் பொலிசார் எடுக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment