Translate

Thursday, 15 March 2012

அரசியல் தீர்வுக்கு மனித உரிமை கவுன்ஸில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்


அரசியல் தீர்வுக்கு மனித உரிமை கவுன்ஸில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்ஸில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறியுள்ளதாகவும் இது தொடர்பில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வேண்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது இடம்பெறும் வன்முறைகள் பழைய குழப்பமான சூழ்நிலையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்த காலம் தேவை என அரசாங்கம் கூறிவருவதாகவும் ஆனால் வருட காலங்களாக இதையே தொடர்ச்சியாக இலங்கை கூறி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதனால் இலங்கையில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இலங்கை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையை வாசிக்க...

No comments:

Post a Comment