ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இந்தத் தீர்மானம் வழிகோலும் என தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அன்ஞான் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளை மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்
.
.
No comments:
Post a Comment