பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினை நாட்டின் பிரச்சினை. ஆனால் ஜெனீவா பிரச்சினையோ அரசாங்கத்தின் முட்டாள்தனத்தால் அனுபவிக்கின்ற சொந்தப் பிரச்சினை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கண்டியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, சரத் மனமேந்திர, கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எம்.பிக்களான கரு ஜயசூரிய, கயந்த கருணாதிலக, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, தயாசிறி ஜயசேகர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,ஜெனீவாவின் தீர்மானம் அரசாங்கத்தின் பிரச்சினையாகும். ஆனால் வாழ்க்கைச் செலவு என்பது எமது வீட்டின் பிரச்சினை. எனவே நாங்கள் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும்படியே போராட்டம் செய்கின்றோம். அரசு கூறும் போலிக் காரணங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வராவிட்டால் அடுத்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment