அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம் - இலங்கை அமைச்சரின் கோமாளித்தனம்
தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் கோமாளிகள் என்று ஒரு காலத்தில் இலங்கையை சேர்ந்த சரத் பொன்சேகா என்ற போற்குற்றவாளி சொன்னான். அது உண்மையாகவே இருந்தாலும் இப்போது இலங்கையின் அரசியல் வாதிகள் எல்லோரையும் மிஞ்சும் கோமாளிகளாக இருக்கிறார்கள்.
ஐ.நா வில் இலங்கைக்கு எதிரானா தீர்மானம் என்று சொல்லப்படும் ஒரு சப்பைக்கட்டு தீர்மானம் ஒன்று அமெரிக்காவால் முன்மொழியப் படுகிறது. இந்த தீர்மானம் எந்த விதத்திலும் தமிழர் நலன் சார்ந்த தீர்மானம் இல்லை. இருந்தும் இந்த தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்க்கிறது. காரணம் அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக உள்ளதாம். அதனால் இந்த தீர்மானத்தை கொண்டு வரும் அமெரிக்க நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் வீரவன்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் படி கோக், பெப்சி, கூகிள், ஜிமெயில், மெக் டொனால்ட் போன்ற அனைத்து அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகளை உடனே இலங்கையர்கள் புறக்கணிக்கவேண்டும் என்றார் . இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கை அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பதனால் யாருக்கு நஷ்டம். இலங்கையின் வருமானத்தை நம்பி அமெரிக்கா இல்லை. அமெரிக்காவை நம்பி தான் இலங்கையின் பொருளாதாரம் இருக்கிறது . பல ஏற்றுமதிகள் அமெரிக்காவை நம்பி தான் இலங்கை இருக்கிறது. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் யுத்தியை இப்போது இலங்கை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார் . இவருக்கு ஆதரவாக புத்த பிக்குகளும் களம் இறங்கி உள்ளனர்.
ஒன்றுமில்லாத தீர்மானத்திற்கே இலங்கையில் ஒரு அமைச்சர் இவ்வாறு பேசியிருக்கிறார். ஆனால் தமிழ் நாட்டில் இதுவரை ஒரு அமைச்சர் கூட இலங்கை பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என ஒரு அறிக்கை கூட விட்டதில்லை. தமிழினத்தையே கொன்ற இலங்கையில் இருந்து இன்றும் பல பொருட்கள் மற்றும் சேவைகள் தமிழ்நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதை புறக்கணித்தாலே இலங்கை அரசு ஆட்டம் கண்டு விடும். ஆனால் இதை செய்யாமல் இலங்கையில் இருந்து வரும் அரச விருந்தினர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றது தமிழக அரசு. இலங்கையிடம் இருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன உணர்வை கற்றுக் கொண்டு இனிமேலாவது இலங்கையை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை தமிழக அரசியல் வாதிகள் முன்னெடுக்கவேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை.
No comments:
Post a Comment