இந்தியாவின் தேவைக்காகவே பிரபாகரனுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் யுத்தம் மேற் கொள்ளப்பட்டது. எனவே இந்த ப õவக்கறையை இந்தியா கழுவ வேண்டிய அவசியம் உள்ளதென்றும் அம் முன்னணி அறிவித்தது.
இது தொடர்பாக இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்குண்டு. ஏனெனில் இந்தியாவின் தேவைக்கினங்கவே தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனவே அந்தப் பாவக்கறையை போக்கும் தேவை இந்தியாவிற்கு உள்ளது. எனவே ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது மகிந்தவை பாதுகாக்கவும்.
அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை பொறுப்பேற்கவும்இந்தியா காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் பல உறுதி மொழிகளை வழங்கி ஏமாற்றியதால் இம்முறை இந்தியா கடும் போக்கினை கடைப்பிடிக்கவுள்ளது என்றார். ___
No comments:
Post a Comment