Translate

Thursday, 29 March 2012

உலகளாவிய தமிழ் இளையோர் மாநாடு


உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்கள் பலர் கல்விசார்ந்த துறைகளிலும், விளையாட்டு, கலை மற்றும் பண்பாட்டில் அதிகூடியசெயற்திறனுடன் அறிஞர்களாக சிறந்து விளங்குகின்றார்கள்இவையாவையும் பூர்த்திசெய்து அதேநேரத்தில் அவ்விளையோர்கள் மனிதஉரிமை மற்றும் அரசியல் வலிமையையும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.


அவ்விளையோர்களாகிய நாம், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும் எமது பண்பாடு, மரபு, மொழி மற்றும் தேசியஅடையாளம் போன்றன எம்மை ஒன்றிணைக்கின்றன.
எமது நியாயமான போராட்டத்திலும், இலக்குகளிலும் உள்ள ஒற்றுமையும், உலக சமாதானத்தில் எமக்குள்ள அளப்பரிய பற்றும், நாம்உலகில் எங்கிருந்தாலும், எம்மை ஒன்றுசேர்க்கின்ற உந்து சக்திகளாக அமைகின்றன.
வில்லியம் சேக்ஸ்பியர் கூறியதுபோல் 'உலகம் ஒரு நாடக மேடை.' ஆகவே எமது திறமையை எதற்காக ஒருநாட்டுக்குள் மட்டும்அடக்கி வைக்கவேண்டும்இவ்வுலகில் எமக்குத் திறமைமிக்க வழிகாட்டிகள் பலபேர் உள்ளனர்எனவே நாம் உலக அரங்கில் பங்களிப்பதுஇன்றியமையாத ஒன்றாகின்றது!
ஒவ்வொருவரும் வேறு வேறு துறைகளில் உள்ள பலருடன் தொடர்பு வைத்துக்கொள்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகஉள்ளதுநவீனமுறையாக இவ்வுலகு மாறிக்கொண்டு வருவதால் எமது மத்தியில் செயற்பாடு ரீதியான ஒற்றுமையும் அறிவுபூர்வமானகலந்தாலோசனையும் இயல்பாக வருகின்றன.
இதை மனதில் வைத்து உலகளாவிய தமிழ் இளையோர் அவை தமது இரண்டாவது மாநாட்டை வரும் ஏப்ரல்  8ஆம் நாட்களில்ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில், நடாத்தவுள்ளது.
தமிழ் இளையோருக்காகப் பணிசெய்து வரும் உங்கள் அமைப்பையும் இம்மாநாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்பங்கேற்க விரும்பும்அமைப்புகள் தயவுசெய்து கீளே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் மூலம் வரும் 31.03.2012 முன் எங்களை தொடர்புகொள்ளவும்.

இது
 தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோருக்கு ஒருங்கிணைக்கப்படும் மாநாடாகும்.

contact@gtyl.org
 www.GTYL.org

நன்றி
தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்
சஞ்சய்

No comments:

Post a Comment