தமிழ் கடைகளில் இலவச சாராயம் கேட்டு மிரட்டும் தாதா !

மாலையில் கூட்டம் கூட்டமாக வரும் இந்த தாதாக்களுக்கு, இலவச சாராயத்தை கொடுத்தால் அவர்கள் பிரச்சனை இல்லாமல் சென்றுவிடுவார்கள் என்று மட்டும் நீங்கள் நினைக்கவேண்டாம். கொண்டுபோன தண்ணி காணாட்டியும்(பத்தாமல்போனாலும்) பிரச்சனை தான். திரும்ப வெறியோடு வந்து மேலும் ஒரு இலவச பாட்டில் கேட்பார்களாம். சமீபத்தில் குரோய்டனில் உள்ள பெஸ்ட்வே காஷ் அன் கரியில், நடந்த சம்பவம் இது. இலவச சாராயம் தரமுடியாது என்று மறுக்கப்பட்டதால், தமிழர் ஒருவர் போடும் ஆட்டம் இது. இங்கே அவர் பாவிக்கும் அநாகரீகமான வார்த்தைகளை நாம் கட் பண்ணி விட்டோம். அதனை காதுகொடுத்து கேட்க்க முடியவில்லை. ஆக மொத்தம் இலவச சாராயத்துக்குக்காக என்னவேண்டும் என்றாலும் இந்த தாதாக்கள் செய்வார்கள் போலும் !
வீடியோவைப் பாருங்கள் !
No comments:
Post a Comment