சுவிஸ் தமிழர்களுக்கு மரணதண்டனை எச்சரிக்கை !
சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம் என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டை காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை துண்டு பிரசுரம் மஞ்சள் கடித உறையில் வைத்து அனுப்ப பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் சுவிஸில் உள்ள சிறிலங்கா தூதரகமும், சுவிஸில் உள்ள ஈ.பி.டி.பி குழுவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்ண், வோ, சூரிச், உட்பட சுவிஸில் பல மாநிலங்களிலும் உள்ள தமிழர்களுக்கு எச்சரிக்கை கடிதமும், இறுவெட்டும் அனுப்பட்டுள்ளதாகவும், அந்த இறுவெட்டில் எச்சரிக்கை ஒலி அடங்கிய செய்தி ஒன்று சொல்லப்பட்டிருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்கள், ருவிட்டர், பேஸ்புக் ஊடாக செய்திகளை வெளியிடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அந்த இறுவெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்ரேலியா உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் இந்த எச்சரிக்கையை மீறி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அல்லது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக அவதூறாக பேசுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கைப்பட்டுள்ளதாக 20மினுட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சுவிஸில் எத்தனை பேருக்கு இந்த கடிதம் கிடைத்திருக்கிறது என்பதை சரியாக கூற முடியாவிட்டாலும் பேர்ன் நகரில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இக்கடிதம் கிடைத்திருப்பதாக தாம் உறுதி செய்திருப்பதாக 20மினுட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது. பேர்னில் இருக்கும் தமிழ் பெண் ஒருவர் 20மினுட்டனுக்கு தகவல் வழங்கிய போது தனது பெற்றோருக்கு இந்த எச்சரிக்கை கடிதம் கிடைத்திருப்பதாகவும், அதனால் தனக்கும் தனது பெற்றோருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுவதாகவும், வெளியில் நடமாட பயமாக இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
சுவிஸில் வாழும் அநேகமான தமிழ் குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள சுவிஸில் அகதி தஞ்சம் கோரியவர்கள். தங்களின் உறவினர்கள் இலங்கையில் இருப்பதால் அவர்களுக்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை படைகளாலும் ஆபத்து ஏற்படலாம் என தாம் அஞ்சுவதாக பல தமிழர்கள் அஞ்சுவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலங்களில் தாங்கள் கலந்து கொண்டதை தவிர சிறிலங்கா அரசுக்கு எதிராக வேறு எதையும் செய்யவில்லை என்றும் ஆனால் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் பேர்ன் நகரில் உள்ள தமிழ் பெண் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் எங்கும் கண்ணும் காதையும் வைத்திருக்கிறார்கள் என்றும் சுவிஸில் உள்ள தமிழ் மக்களின் நடமாட்டத்தை ஈ.பி.டி.பி போன்ற ஒட்டுக்குழுக்கள் மூலம் தகவல்களை பெற்று தங்களுக்கு மரண அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார்கள் என சுவிஸில் உள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஊர்வலங்களில் கலந்து கொண்ட தமிழ் மக்களின் புகைப்படங்களையும், வீடியோவையும் பெற்றுள்ள ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகமும், சிறிலங்கா புலனாய்வு பிரிவினரும் இந்த மரண அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். இந்த கடிதங்களை யார் அனுப்பினார்கள் என்பது சரியாக தெரியாவிட்டாலும், இதன் பின்னணியில் சிறிலங்கா தூதரமும், சில சிறிலங்கா படைகளுக்கு ஆதரவான சில குழுக்களும் இருக்கலாம் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இது ஒரு அபத்தமான செயல். சில கடிதங்கள் சரியான விலாசங்கள் இல்லாததால் ஒப்படைக்க முடியாது தபாலகங்களில் தேங்கிக்கிடப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை கடிதம் தொடர்பாக சுவிஸ் சமஷ்டி புலனாய்வு காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இதேவேளை சுவிஸில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த ஈ.பி.டி.பியினர் தொடர்பாக சுவிஸ் காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சுவிஸில் உள்ள ஈ.பி.டி.பியினரே இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இலங்கையில் நாடு பூராகவும் இந்த துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த துண்டு பிரசுரமும், பிரத்தியேகமாக இறுவெட்டும் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
20 minuten பத்திரிகை செய்தியை பார்வையிட இங்கே அழுத்தவும். http://www.20min.ch/schweiz/news/story/14820842
No comments:
Post a Comment