Translate

Saturday 17 March 2012

இலங்கை அரசின் செயற்பாடுகள் வன்முறைக்கு வித்திடுகின்றன

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவ மயமாக்கம் மற்றும் சிறுபான்மை இன தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு என்பன மீண்டும் வன்முறைகளை தோற்றுவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு சர்வதேச நெருக்கடிகள் குழு இன்று தெரிவித்துள்ளது. அக்குழுவின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலம் தமிழர் பிரதேசம் என்ற ஒன்று இல்லாமல் போகிறதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கலாச்சாரம், பண்பாடு, மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படை மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இலங்கை அரசாங்கம், அங்கு வன்முறையை விதைக்கிறது.

வடக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை மாற்றி அவ் இடங்களிற்கு சிங்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகிறது.

முக்கியமாக வடக்கு கிழக்கில் போர் நினைவு சின்னங்களை அழித்தல், பௌத்த விகாரைகளை அமைத்தல், மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள வீதிகளுக்கு சிங்கள பெயர்களை வைக்குன்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னதான இத்தகைய செயற்பாடுகள் மீண்டும் வன்முறைக்கு இட்டுச் செல்வதாக சர்வதேச நெருக்கடிகள் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment