Translate

Friday, 16 March 2012

ஜெனீவா தீர்மானத்தால் இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை _


  இலங்கையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஜரோப்பிய,மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக துறை சார்ந்தவர்கள் வருகை தரவுள்ளதுடன்,சர்வதேச ஊடகவியலளார்கள் 70 பேரும் அந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

நேற்று வியாழக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பஷில் ராஸபக்ஷ,

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதனோடு மட்டுமல்லாது ஏனைய துறைகளின் வளர்ச்சியும் பராட்டும் அளவுக்கு உயரந்துவருகின்றது. சர்வதேசததில் எத்தகைய பிரச்சினைகள்,நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதும் எமது நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

எரிபொருள் விலையேற்றமானது தவிர்க்க முடியாதொன்று இதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு பல திட்டங்களை நாம் நடை முறைப்படுததி வருகின்றோம்.குறிப்பாக விவசாய துறையினை பாதுகாக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்கி அவர்களது உற்பத்திகளுக்கான உரிய விலையினை பெற்றுக் கொடுத்துவருகின்றோம்.

இலங்கையின் பொருளாதரத்தில் தளம்பலை ஏற்படுத்த சில சக்திகள் செயற்பட்டன.குறிப்பாக ஜீ.எஸ்.பீ. பிளஸ் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. அதனால் இலங்கை ஜரோப்பிய ஒன்றியம் ஆக்கிரமித்துவிடும் என்ற நிலை காண்ப்பட்டது.ஆனால் அதற்கு முகம் கொடுத்து,ஜீஎஸ்பி அகற்றப்பட்தும்,எமது பொருளாதார அத்துறையில் 20 சதவீத வளர்ச்சியினை கண்டுள்ளது.பொருளாதார தம்பல் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்பட்ட போது இலங்கையிலும் அது ஏற்படும் என எதிர் பார்த்ததார்கள் ஆனால் அந்த நிலை எமக்கு ஏற்படவில்லை.

ஜெனீவா மாநாட்டின் தீர்மானத்தால் இலங்கை பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்படுமா என ஊடகவியலளார் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,

அதனால் இலங்கை எவ்விதத்திலும் பின்னடைவையும் சந்திக்காது.எமது நாட்டுக்கு ஆதரவாக பல நாடுகள் இன்று கைகோர்த்து நிற்பதாகவும் கூறினார்.எமது பொருளாதார வளர்ச்சி வேகம் குறுகிய காலத்தில் உயர் நிலையினையடைந்தமைக்கு தெளிவான தலைமைத்துவத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை மறந்துவிட முடியாது என்றும் நினைவுபடுத்தினார்.

இந்த செய்திளார் மாநாட்டில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ஜகத் புஷ்பகுமார,ரெஜினோலட் குரே,பதில் அமைச்சர் ஏர்ள் குனசேகர,ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் ஜனக ரத்னாயக்க,அமைச்சின் செயலாளர் திலக் கொல்லுரே உட்பட பலரும் கலந்து கொண்டனர் 
_

No comments:

Post a Comment