tamileelam newsதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரையில் லண்டனில் ஒலிம்பிக் போட்டிடகள் நடைபெறவுள்ளன.


ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ள புலிகளின் அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2007ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடைபெற்ற கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகளின் போது சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்திருந்தது.

சிறீலங்கா அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரங்கள் கைவிடப்பட்டன.

இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த புலி ஆதரவு அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாக குறித்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.