Translate

Sunday, 1 April 2012

இலங்கையைக் கண்காணிக்கத் தனது அலுவலகத்தை அமைக்கிறது மனித உரிமை சபை!


இலங்கையைக் கண்காணிக்கத் தனது அலுவலகத்தை அமைக்கிறது மனித உரிமை சபை!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனைக் கண்காணிக்க இலங்கையில் அலுவலகம் அமைக்கிறது மனித உரிமை சபை.


ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்த கண்காணிப்புக் காரியாலயம் இயங்கும் என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த காரியாலயத்தின் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காரியாலயத்தில் கடமையாற்றுவதற்காக விசேட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

உலகின் சில நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த உத்தியோகத்தர் குழுவில் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரேரணையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படுகின்றனவா என கண்காணிப்பு செய்து, தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதே இந்த காரியாலயத்தின் பிரதான இலக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment