போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக லண்டனில் வழக்கு-உலகத் தமிழர் பேரவை
லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உலகத் தமிழர் பேரவை சார்பில் நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இராஜதந்திர விலக்குரிமையை அனுப்பும் நாட்டினால் மட்டுமே நீக்க முடியும் என்ற போதும், இராஜதந்திர விலக்குரிமையை நீக்கும்படி பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் கோர முடியும் என்று உலகத் தமிழர் பேரவை சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இராஜதந்திர விலக்குரிமையை நீக்க மறுத்தால், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி நாடு கடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீதியின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தாம் செய்த மோசமான குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்கள் ஓயமாட்டார்கள் என்று சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்குத் தெரியவேண்டும். அனைத்துலக அரங்கில் தாம் வரவேற்கப்படவில்லை என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு இந்த நீதிமன்ற நடவடிக்கை மூலம் உணர்த்த வேண்டும்.
அவுஸ்ரேலியாவிலும் நியுயோர்க்கிலும் உள்ள ஏனைய போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முகமாலைப் பகுதியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி கரையோரமாக முன்னேறிய இலங்கை இராணுவத்தின் 55ஆவது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவே தலைமை தாங்கியிருந்தார்.
மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்விடங்கள், மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி படுகொலைகளை செய்ததன் மூலம் போர்க்குற்றங்களை இழைத்ததாக இவர் மீது, அண்மையில் வெளியான சனல் – 4 ஆவணப்படம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment