Translate

Monday 23 April 2012

சிறீலங்காவில் நடந்தது என்ன? நாளை இந்திய பாராளுமன்றில்!


சிறீலங்காவிற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்த இந்திய பாராளுமன்ற குழுவின் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் விஜயத்தின்போது கண்டறிந்த தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். நாளையதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில்...


சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளிக்கவுள்ள நிலையில், இந்த விஐயம் தொடர்பிலான அறிக்கையினை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளிப்பதற்கான திகதியினை பெற்றுக் கொள்வோம் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.


இந்த அறிக்கையில் தமிழர்களின் அரசியல் தீர்வு மற்றும் தற்போது வடக்கில் காணப்படுகின்ற இராணுவ பிரசன்னம் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக மீள் குடியமர்த்துவது குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக நாச்சியப்பன் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 16ம் திகதி இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய சர்வகட்சி குழு சிறீலங்கா சென்றிருந்தது. இதன்போது பல கட்சி முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட இடங்களுக்குச் சென்றதுடன் மெனிக்பாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்திருந்தது.


இந்த சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் தற்போதைய தேவைகள் என்ன என்பதை உணர்ந்து கொண்டோம் என இக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் சிறீலங்காவிற்கான விஜயம் குறித்தும், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவி விளக்கமளிக்க உள்ளார்.


அன்றைய தினமே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கான தினத்தை ஒதுக்கிக் கொண்டு சிறீலங்காவிற்கான விஜயம் குறித்து பூரண அறிக்கையினை பிரதமடம் கையளிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். தமிழ் மக்களின் உமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அம் மக்கள் அவர்களது பூர்வீக பூமியில் சுதந்திரமாக வாழக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மத்தியரசு நடவடிக்கை எடுக்கும்.


ஏனெனில் தற்போது அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான தடைகள் தமிழர் சார்பில் இலங்கையில் இல்லை. எனவே சிறீலங்கா அரசை ஆக்கபூர்வமாக நெறிப்படுத்த எமது அறிக்கை மத்திய அரசிற்கு உதவும் என நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment