
அது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அந்நாட்டு அதிபரும், மந்திரிகளும் மறைமுகமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே வருகிற ஏப்ரல் மாதம் இந்தியா வருகிறார். இந்திய அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் சந்திரிகா பங்கேற்று பேசுகிறார்.
இந்த மாநாட்டில் இலங்கை எதிர்க்கட்சி தலைவரான ரனில் விக்கிரமசிங்கேவும் கலந்து கொள்கிறார். அதில் அவர் உரை ஆற்றுவதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா வரும் இவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளனர். அப்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது
http://lttenews.com/?p=2951
No comments:
Post a Comment