இலங்கையில் இடம்பெற்ற காலப் பகுதியில் போலியான தகவல்களையும் ஆவணங்களையும் தூதரகங்களுக்குச் சமர்ப்பித்து விட்டுத் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்படும் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாகன விபத்தில் உயிரிழந்த நபர்கள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகத் தெரிவித்து போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசியல் தஞ்சம் கோரியோர் பற்றிய தகவல்கள் விரைவில் குறித்த நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

போலியான தகவல்களை வழங்கி இவ்வாறு அடைக்கலம் கோருவதனால் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.