ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சிறீலங்காவிற்கான விஜயத்தினை இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய இருந்த நிலையில் தனது பயணத்தினை ரத்து செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
தனது விஐயத்திற்கு முன்னராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் திட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளமையே, நவனீதம்பிள்ளையின் விஜயம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சிறீலங்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் வரையில் தமது விஜயத்தைத் தொடரப் போவதில்லை என நவனீதம்பிள்ளை தீர்மானித்துள்ளார் என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment