மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூருக்கு நான்கு வழிப்பாதை உடனடித்தேவை. காலத்தைக் குறைத்து, தூரத்தை விரைந்து கடக்க அரசு முன்னெடுத்துச் செல்லும் அரிய திட்டம்.
அந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகையில் வழியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அழிந்து போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுவது என் கடன்.
தமிழரின் அறிவியல் பராம்பரீயம், கட்டடக் கலைப் பராம்பரீயம், தமிழ் மொழிக் காப்புப் பராம்பரீயம், வாழ்வுக்குரிய ஒழுக்க நெறிப் பராம்பரீயம், இசை, நடனம், நாடகம், சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைப் பராம்பரீயம் யாவும் தரைமட்டமாகும் முயற்சியே அந்த நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிக்காக அருள்மிகு அமிர்தவல்லி உடனுறை பனங்காட்டுநாதர் கோயிலை உடைக்கும் முயற்சி.
வானிலை அறிவியலை வளர்க்கும் முயற்சியாக, சூரியனின் கதிர் எந்த நாளில் திருப்புறவார்பனங்காட்டூர் (பனையபுரம்) நேர்கிழக்காக நிற்கிறது என்ற கணிப்பைத் துல்லியமாகக் காட்டும் அறிவியல் ஆய்வின் பேறாக, சித்திரை முதல் நாள் முதலாக ஏழாம் நாள் ஈறாக ஒவ்வொருநாளும் சூரியன் தோன்றும்பொழுது, சுவாமிமேலும் அம்பாள் மேலும் கதிர்கள் விழுமாறு கட்டிய நம் முன்னோரின் முயற்சியை முறியடிக்க விழைவோர் அக்கோயிலை நான்கு வழிச் சாலைக்காக இடிப்பர்.
தமிழ் மொழியின் யாப்பிலக்கண மரபு, சொல்லாட்சித் திறன், சொல்வளப் பெருக்கம், தமிழுக்கும் இசைக்கும் உள்ள நீண்ட இறுகிய பிணைப்புக் கொண்ட செம்மாந்த தமிழைப் படிப்பவன் வாழ்வான், தமிழால் இறைவனுடன் பேசலாம் என்ற செய்திகளை அந்தக் கோயிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் எடுத்துக் கூறியுள்ளார்.
தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார் பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் (திருமுறை 02053) செய்யுளைப் பாடவல்லவர் சிவநெறியாளரே, ஒழுக்க சீலரே என்கிறார் அவர். விண்ணார்ந்த (திருமுறை 02053) எனத் தொடங்கும் சீகாமாரப் பண்ணில் அந்தப் பதிகம் 1,400 ஆண்டுகளாக அக்கோயிலில் தொடர்ந்து இசைக்கப்படுகிறது.
பார்க்க:
திருக்கோயில் காணொலி காண்க, பாடல்களைத் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையில் கேட்க, பாடல்களுக்குப் பொழிப்புரை, குறிப்புரை காண்க, ஆங்கில மொழிபெயர்ப்புப் படிக்க.
அரபு, ஆங்கிலம், ஆப்பிரிக்கன்சு, உருசியன், குறி-உரோமன், கன்னடம், கிரியோல், சிங்களம், சீனம், சுவாகிலி, ஞாலஒலிநெடுங்கணக்கு, தாய்லாந்து, தெலுங்கு, தேவநாகரி, பர்மியம், பாசா-இந்தோனீசியா, பிட்சின், மலாய், மலையாளம், யப்பான், யேர்மன் ஆகிய 20 மொழிகளின் வரிவடிவங்களில் ஒலிபெயர்ப்புக் காண்க.
ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் இருந்தால் காண்க.
மேற்காணும் படத்தில், நால்வழி நெடுஞ்சாலைக்காக, எந்தப் பகுதி இடிக்கவேண்டும் என்பதைக ஆட்சிப் பொறியியலாளர் குறியிட்டுச் சென்றதைக் காட்டுகிறார் நெஞ்சை உலுக்கும் செய்தி சொன்ன அடியார்க்கு அடியவர்.
முதலாம் குலோத்துங்க சோழனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு, பரகேசரி ஆதி ராஜேந்திர தேவனின் மூன்னாம் ஆண்டுக் கல்வெட்டு என, அங்குள்ள வரலாற்றுச் செய்திகளை, நான்கு வழிச்சாலைக்காக உடைக்கலாமா?
பனை மரத்தைத் திருக்கோயில் திருமரமாக உடைமையால் பனங்காட்டூர். 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழப் பேரரசன் சிபி. புறாவின் பொருட்டுத் தன் தசையை அரிந்திட்ட அச் சோழன் சிபிப் பேரரசனக்கு அருள்செய்த திருக்கோயில் எனவே புறவார் பனங்காட்டூர்.
விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே முண்டியம்பாக்கம் தொடர்வண்டி நிலையம். வடகிழக்கே 1.5 கிமீ. தூரத்தில் இத் திருக்கோயில். விழுப்புரம் (திருக்கனூர் வழி) பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகளில் கோயிலை அடையலாம். இது நடு நாட்டுத் திருக்கோயில்களுள் ஒன்று.
முகவரி: பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், 605603, தொபே. 9444897861
உலகெங்கும் 40 நாடுகளில் பரந்து வாழும் சைவப் பெருமக்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் திருப்புறவார் பனங்காட்டூர் செல்வர். வழிபடுவர். வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவர். மரபை நினைவில் நிறுத்துவர். வேர்களைத் தேடுவர்.
தமிழர்களின் வேர்களையே அழிக்கும் முயற்சியே, அக்கோயிலை இடிக்கும் முயற்சி. அக்கோயிலைச் சுற்றி ஒரு கிமீ. சுற்றுவட்டாரத்தில் எந்த இடிபாட்டுப் பணியும் மேற்கொள்ளலாகாது.
அரசுக்குக் கருத்துத் தெரிவிக்க விரும்புவோர் செல்க
National Highway- 45C
nearest place—thirukkanur road junction with NH45C
land mark—– panangkaattu Iswar temple
City/Town/Village — villuppuram/Mundiyampaakkam/Panayapuram .605603
My complaint– Panyapurma temple is located very near to Panayapuram Kootu road.Kms from Villupuram on the Villupuram – Tirukkanur – Pondicherry road. It is about 10 Kms. from Vikravandi on the Tindivanam – Vikravandi – Panruti road .An Ancient Temple of Shiva sung by the Saint Thiru Gnaanasampanthar.this temple which is an excellent memorial of ancient Tamil architecture and mathematical genius- It is constructed in such a way that on the First day of the Indian New Year ( Chithirai 1st) the sun worships the lord and Amman with it’s rays.
This temple is slated for destruction for the expansion of NH45C .
Please avoid destructing a sacred monument of cultural and religious importance.
nearest place—thirukkanur road junction with NH45C
land mark—– panangkaattu Iswar temple
City/Town/Village — villuppuram/Mundiyampaakkam/Panayapuram .605603
My complaint– Panyapurma temple is located very near to Panayapuram Kootu road.Kms from Villupuram on the Villupuram – Tirukkanur – Pondicherry road. It is about 10 Kms. from Vikravandi on the Tindivanam – Vikravandi – Panruti road .An Ancient Temple of Shiva sung by the Saint Thiru Gnaanasampanthar.this temple which is an excellent memorial of ancient Tamil architecture and mathematical genius- It is constructed in such a way that on the First day of the Indian New Year ( Chithirai 1st) the sun worships the lord and Amman with it’s rays.
This temple is slated for destruction for the expansion of NH45C .
Please avoid destructing a sacred monument of cultural and religious importance.
படத்திற்கு நன்றி :
No comments:
Post a Comment