Translate

Wednesday, 25 April 2012

சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும்


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில்நேற்று தொடங்கிய மாவட்ட காங்கிரஸ்,தலைவர் சிவராஜ் இல்ல திருமண விழாவில்,எம்.எல்.ஏ.,ஞானசேகரன்இளைஞர் காங்கிரஸ்தலைவர் யுவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டுமணமக்கள் மதுசூதனன்- கணபதி ருச்சிரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம்இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக  ஓட்டளித்தது இந்தியா. 
அதன் பிறகு அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை முழுமை பெற வேண்டும்,அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது என்பதற்காகஎதிர்க்கட்சி தலைவர் தலைமையில்,மத்திய அரசு கடந்த மாதம் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவைஇலங்கைக்கு அனுப்பியது.
தமிழர்கள் இழந்த வீடுநிலங்களை பெற்றுத் தர வேண்டும். சிங்களர்களுக்கு நிகரான உரிமையை பெற்று வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைஅங்குள்ள தமிழக மக்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். 

 இலங்கைக்கு அனுப்பப்பட்ட குழுவின் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த பயணம்,அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் என நம்புகிறோம். 

 இலங்கை பிரச்சினையை பொறுத்தவரை,மத்திய அரசு சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க.இரு கட்சிகளும் இலங்கைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெறாதது வருந்தத்தக்கது. குழுவினர் ஆட்சியாளர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்துதமிழர்களின் நிலை குறித்தும்வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளனர்.

 
இக்குழுவினர்,விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில்,பிரச்சினைகளை முழுமையாக தீர்வு கண்டு,தமிழர்கள் வாழ்க்கை மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்  என்று கூறினார்.

No comments:

Post a Comment