Translate

Sunday 22 April 2012

மஹிந்தவை தனியே சுஷமா சந்திப்பு; தமிழகத்தில் சர்ச்சை


மஹிந்தவை தனியே சுஷமா சந்திப்பு; தமிழகத்தில் சர்ச்சை
news
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சவை தனிமையில் சந்தித்துப் பேசியது தொடர்பில் தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் இவ்வாறு சந்தித்திருப்பதானது, குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.


இந்தியப் பிரதமர் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமையில் சந்திப்பதை ஏற்கலாம். ஆனால் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்சவை சுஷ்மா தனிமையில் சந்தித்தார் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒன்றுபட்ட இலங்கையைத்தான் இந்தியா ஆதரிக்கும் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார். இதுவும் அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும். என அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்துள்ளார்.

அவ்வாறு சுஷ்மா சுவராஜ் கருத்துச் சொல்வதற்கு, இந்தியாவின் பிரதமர் அல்லது குடியரசுத்தலைவர் அதிகாரம் வழங்கியிருக்கிறார்களா? எனக் கேள்வியெழுப்பியுள்ள திருமாவளவன்,

இது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களிடையே பெரும் அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்றார்.

அதேநேரம், இவ்விடயம் குறித்து, தமிழகத்தில் பல கட்சிகளிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

No comments:

Post a Comment