Translate

Wednesday 25 April 2012

பாக்கிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் ஆனதுபோல தமிழீழம் அமையவேண்டும் !

சமீபகாலமாக கலைஞர் கருணாநிதிக்கு தமிழீழம் மீது பெரும் ஆசை உருவாகியுள்ளது. சரியான நேரத்தில் மற்றும் அதற்கான போராட்டங்கள் கடுமையாக இருந்தவேளை அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த இவர் தற்போது காலம் கடந்து ஞானம் வந்தவர்போல அலட்டிக்கொள்கிறார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 


இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழம் அமைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். தனி ஈழம் தவிர இலங்கை தமிழ் மக்கள் வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் தீர்வு அல்லது அதிகார பரவல் போன்ற உறுதிமொழிகள் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை. அவை வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. கொடுத்த உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றவில்லை. அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக உள்ள பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தனி ஈழம் அமைப்பது தான். இதனை நிறைவேற்ற காலம் வந்து விட்டது. 

பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் அமைக்க இந்தியா உதவியது போல் தனி ஈழம் அமைக்க உதவி செய்ய வேண்டும். தெற்கு சூடான், கிழக்கு தைமூர், மோன்டென்க்ரோ போன்ற நாடுகள் ஐ.நா.,வின் உதவியால் புதிதாக தோன்றின என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment