Translate

Monday 23 April 2012

“பிளஸ்” அல்ல பதின்மூன்றைக் கூட வழங்குவதற்கு சிங்கள பௌத்தர்கள் இடமளிக்கமாட்டார்கள்


பதின்மூன்று “பிளஸ்’ அல்ல பதின்மூன்றைக் கூட வழங்குவதற்கு ஒரு போதும் சிங்கள பௌத்தர்கள் இடமளிக்கமாட்டார்கள். இந்தப் பேச்சுக்கே இலங்கையில் இடமில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இந்தியாவோ அமெரிக்காவோ எம் மீது தீர்வுகளை திணிக்க முடியாது என்றும் அக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய குழுவிடம் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார் என இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த கருத்து தொடர்பாக கேட்ட போதே ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய அரசியல் குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒருபோதும் எம்மிடம் பதின்மூன்றாவது திருத்தத்தையோ அல்லது பதின்மூன்று பிளஸ் தொடர்பிலான தீர்வுகளை வழங்குவதாக தெரிவித்ததில்லை.
மஹிந்த சிந்தனையிலும் இது தொடர்பாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்தியக் குழு எதனையும் தெரிவிக்கலாம் , ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு இல்லை.
எந்த விடயமானாலும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஆராயப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே தீர்மானம் மேற்கொள்ளப்படும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடித் திவதால் எதுவுமே நடைபெறப் போவதில்லை.
கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துகொள்ள வேண்டும்.
அத்தோடு பதின்மூன்று பிளஸ் அல்ல பதின்ன்றைக் கூட வழங்குவதற்கு இந் நாட்டின் சிங்கள, பௌத்தர்கள் இடமளிக்கப் போவதில்லை.
மஹிந்த சிந்தனையில் இவ்வாறான தொருதிட்டம் ன் வைக்கப்படவும் இல்லை. அதேபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பதின்மூன்று தொடர்பாக எதனையும் எம்மிடம் தெரிவித்ததில்லை என்றார்.

No comments:

Post a Comment