Translate

Sunday, 13 May 2012

அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !


அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 மட்டுமே!

1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

2.உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்குங்கள்.

3.காலம் சென்ற உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரால் வருடாந்தம் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் நாள் உணவு வழங்குங்கள்.


எமது இல்லம் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றது.

தற்போது எமது பராமரிப்பில் 108 பெற்றோரை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுகாமம், செட்டிபாளையம் ஆகிய இரு இடங்களிலும் உள்ள எமது திலகவதியார் மகளிர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.

இக் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, உடை, தங்குமிடம், சுகாதாரம் போன்ற அனைத்து தேவைகளையும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வழங்கி இவர்களை பராமரித்து வருகின்றோம்.

இக் குழந்தைகளை பராமரிக்கும் பணிக்கு தற்போது எமக்குக் கிடைக்கின்ற நன்கொடைகள் போதாமையினால் நாம் தொடர்ந்து பல கஸ்ரங்களை எதிர்நோக்குகின்றோம்.

எனவே இக் குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்குமாறு தங்களை மிக்க தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”

நன்றி.

THILAKAVADIYAR ILLAM,
Batticaloa, Srilanka.
Email : swolk.org@gmail.com
Phone/ Fax : 0094 65 2250189
Mobile : 0094 776689791


நிதி உதவிகளுக்கு :

A/C Name : Social Welfare Organization
A/C No : 1105029089
Bank : Commercial Bank of Ceylon PLC
Batticaloa Branch.
Swife Code : CCEYLKLX


தாய் தந்தை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்க விரும்பும் அன்பர்கள் பின்வரும் விபரங்களை தயவு செய்து எமக்கு அனுப்பி வையுங்கள்.

1. நிதி உதவி வழங்குபவரின் முழுப் பெயர் : ............

2. வசிக்கும் நாடு /முகவரி :.....................................
3. தொலைபேசி இல : ..............................................
:...............................................
ஈமெயில் :..........................................................

4. உணவு வழங்கப்பட வேண்டியவரின் முழுப் பெயர்: .....................................................................

5. உணவு வழங்குவதற்கான காரணம் (பிறந்த நாளை முன்னிட்டு/ திருமண நாளை முன்னிட்டு/
அமரத்துவம் அடைந்தவரின் ஆத்ம சாந்திக்காக,/ ஏதும் நினைவாக) : ..................................................

6. உணவு வழங்கப்பட வேண்டிய திகதி: ..................

No comments:

Post a Comment