முள்ளிவாய்க்கால் போன்று பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும் - எச்சரிக்கை விடுத்தார் சம்பிக்க!
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் பின்னால் தமிழர்கள் செல்வார்களாயின்,
தற்போது நிகழ்ந்துள்ளது போன்று 100 முள்ளிவாய்க்கால்களை பார்க்க நேரிடும் என இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறிலங்கா அரசின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரான சம்பிக ரணவக்க, ஜாதிக ஹெல உருமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மாநாட்டில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
.'100 முள்ளிவாய்க்கால்களை உருவாக்குவதற்கு சம்பந்தன் முயற்சிக்கிறாரா? நாங்கள் கடந்த கால நிகழ்வுகளை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் ஆர்.சம்பந்தன் எம்மை மீண்டும் யுத்தத்திற்கு அழைப்பாராயின் எங்கள் தேசம் அதை பெருமையுடன் சவாலாக ஏற்றுக்கொள்ளும். ஒரு முள்ளிவாய்க்கால் போதும். நூறு முள்ளிவாய்க்கால்களை உருவாக்க முயற்சிக்காதீர்கள்' என அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், இரா.சம்பந்தன் தனது உரஇயில் பிரிவினை வாத கருத்துக்களை வெளியிட்டதாக சிறிலங்கா அரசு தரப்பு, ஜாதிக ஹெல உறுமயவும் குற்றம் சாட்டி வருகின்றன. வி.புலிகளால் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத போரை ஒரு விடுதலை போராட்டமாக சம்பந்தன் வர்ணித்ததாகவும், 13 வது சீர்திருத்த சட்டத்தை சுய நிர்ணய உரிமைக்கான உபயமாகவே பயன்படுத்தியதாக வெளிப்படையாகவே கூறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் ஆங்கில, சிங்கள மொழிமாற்றத்தின் போது அவை தவறுவதலாக அர்த்தப்படுத்தப்படுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.http://kathiravan.net/newsview.php?mid=35&id=2866
No comments:
Post a Comment