லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவில் இளையராஜாவின் பாடல்!!
லண்டனில் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழாவின் தொடக்கவிழா நிகழ்வில், இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரம் செய்தி உண்மைதான் இளையராஜாவின் அலுவலகத்தில் உறுதி செய்துள்ளனர்.
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு இந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி.
அதில் இடம் பெறும் 86 பாடல்களில் இந்த முறை தமிழ்த் திரைப்படப் பாடலும் இடம்பெறுகிறது.
பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்கள்தான் இதில் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை இந்தப் பாடல்கள் பட்டியலில் கபடியின் பெருமை பேசும் ஒரு பாடல் இடம்பிடித்துள்ளதாம்.
இசைஞானி இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய “நான்தான் ஒங்கப்பண்டா…” என்ற பாடல்தான் அது.
கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான ‘ராம் லக்ஷ்மண்’ என்ற படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. கவிஞர் வாலி எழுதியுள்ளார்.
கபடி விளையாட்டு வீரர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய பாடல் அது.
சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக் குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
மாயா…
இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம். இவரது, பிரபலமான “ பேப்பர் ப்ளேன்ஸ்”, (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.
குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து.
உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசை இடம்பெறுவது தமிழர்களை பெருமையடையச் செய்திருக்கிறது.
இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
‘உண்மைதான்’ – இளையராஜா அலுவலகம்
சென்னையில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, “லண்டன் ஒலிம்பிக்கில் இந்தப் பாடல் இடம்பெறுவது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது,” என்றனர்.
http://kathiravan.net/news.php?mid=35
http://kathiravan.net/news.php?mid=35
No comments:
Post a Comment