கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட மாதகல் பகுதியின் சில இடங்களில் மீண்டும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டு தாம் அச்சுறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய மாதகல் மேற்கு பகுதி மக்கள் தமது பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் உடனடியாக வெளியேறி தாங்கள் மீளக்குடியேற வழிவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை வலியுறுத்தி யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நேற்று காலை திரண்ட மாதகல் மேற்கு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளை துப்பரவு செய்யச் சென்ற மக்களை கடற்பரையினர் விரட்டியதாகவும் குற்றஞ்சாட்டிய அவர்கள் தாம் எடுத்துச்சென்ற மண்வெட்டி கோடாரி உள்ளிட்டவற்றையும் கடற்படையினர் பறித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.இவற்றைச் சுட்டிக்காட்டி சிறீலங்கா ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அவர்கள் அனுப்பி வைத்தனர்.
மாதகல் கிராமத்தின சில பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ளது. 1992ஆம் ஆண்டில் எமது கிராமத்தை விட்டு நாம் இடம்பெயர்ந்து சென்றோம்.தற்போது யுத்தம் நிறைவுற்ற நிலையிலும் சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலையில் நாம் உள்ளோம். கடந்த இரண்டாம் திகதி ஈ.பி.டி.பி தரப்பு சிபார்சுடன் பாதுகாப்பு வலயத்திலுள்ள எமது காணிகளை துப்பரவு செய்யச் சென்றோம். இதன்போது துப்பரவு செய்யச் சென்ற மக்களை கடற்படையினர் விரட்டியடித்ததோடு அவர்களின் ஆயுதங்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
மேலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள எமது பகுதிக்குள் மீண்டும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு மக்கள் அச்சுறுத்தப்படுவதை உடன் நிறுத்தி அங்கிருக்கும் மிதிவெடி விளம்பரப்பலகைகளை உடன் அகற்றப்படவேண்டும். இவை தவிர மாணவர்களின் கல்விகூடமான பாடசாலை வளாகத்தின் உள்ளே இருக்கும் கடற்படையின் முகாமை உடனயாக அகற்றி கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வழியமைத்துதரவேண்டும் என மீனவர்கள் தரப்பினில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment