கடந்த திங்கட்கிழமை முதல் ஜெனிவாவில் ஆரம்பித்திருக்கும் 20வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றும் புலம்பெயர் தமிழர்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டு அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், கனேடிய தமிழர் காங்கிரஸ் (Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை (United States Tamil Political Action Council ) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவே இந்த முதற்கட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 19வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒருமாத காலமாக ஜெனிவாவில் தங்கியிருந்து இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும்படி பல உறுப்பு நாடுகளை இச் செயலணி வலியுறுத்தி வந்தது யாவரும் அறிந்ததே.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 20வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுடன் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலை, ஆட்கடத்தல் மற்றும் தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பு போன்ற விடயங்களை இந்த 20வது கூட்டத்தொடர் சந்திப்பின் போது புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் குழு சந்திப்புக்களை ஏற்ப்படுத்தி இனப் படுக்கொலைகளை விளக்கும் CD க்கள் மற்றும் பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றன.
இந்த 20வது கூட்டத்தொடரில் பங்கேற்க பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் ஜெனிவா சென்றிருக்கும் தமிழர் மனித உரிமைகள் குழு எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி வரை நடைபெற இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தொடர்ச்சியாக இராஜதந்திர வேலைகளில் ஈடுபட உள்ளன.
No comments:
Post a Comment