Translate

Sunday, 17 June 2012

பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்குமாறு ஐ.தே.க கோரிக்கை


பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்குமாறு ஐ.தே.க கோரிக்கை
பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு ஐக்கியதேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை கட்டுவான பிரதேசத்தில் ஜே.வி.பி கூட்டத்தின் மீதுநடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ்சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்டபல்வேறு சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்று வரும் நிலையில், இந்த இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என நம்பிக்கைக் கொள்வதற்கு எந்தவிதமானகாரணமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான சகல புகழாரங்களையும் தனதாக்கிக்கொள்ளும் பாதுகாப்புச் செயலாளர், குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதற்கானபொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகம், பாலியன் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின் எண்ணிக்கை நாட்டில் உயர்வடைந்துள்ளது.
ஒப்பந்த கொலையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள், கொலைகளில்ஈடுபடும் படைவீரர்கள், காவல் நிலையங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியமைஉள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நாட்டில் தற்போது பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புத் துறை என்பது மிகவும் முக்கியமானது எனவும்,வினைத்திறனற்ற ஒருவரின் நடவடிக்கையினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுவதனை அனுமதிக்க முடியாதுஎனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பாதுகாப்புச் செயலாளரை பணி நீக்கம் செய்து, தகுதியான ஒருவரைநியமிக்க வேண்டியது அவசியமானது என மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment