ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன பாப்பாண்டவர்16ம் பெனடிக் ஆண்டகையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் ஆயருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வத்திக்கான் தலையீடு செய்ய வேண்டுமென அவர்வலிறுயுத்தியுள்ளார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் மற்றும்அழுத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மிக நீண்ட கடிதமொன்றைபாப்பாண்டவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இனவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் ஆயருக்கு அச்சுறுத்தல் விடுப்போருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைஎடுக்க வேண்டுமென ஜயலத் ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment