ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். இந்திய விடுதலைப் போராட்டத்தை விட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர்,
இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்.
இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர்.
அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர்.
அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000 பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் இந்த இலங்கை விடுதலைப் போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.
அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைவிட உறுதியாக இருக்கிறோம்.
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு கைகொடுங்கள் என்று காசி ஆனந்தன் பேசினார்.
No comments:
Post a Comment