இன்றைக்கு உள்ளவர்கள் தமிழர்கள் தானா ?.
உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்
ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , ஊழல் செய்து விட்டு பெயிலில் வருபவனை வரவேற்கும் இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,பகுத்தறிவு என்ற பெயரில் பழையன எல்லாவற்றையும் அழிக்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும் இனம்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,இலவசங்களை பெற்று உழைப்பை மறந்த இனம்,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ?
No comments:
Post a Comment