Translate

Tuesday, 19 June 2012

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய முதல் நாள் கொடியேற்ற


நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய முதல் நாள் கொடியேற்ற வைபவத்தில் அடியவர்களுக்கு அருள் பாலிப்பதற்காக அம்பிகையின் எழுந்தருளித் தோற்றம்.

நயினாதீவு நாகபூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 19 ஆம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்களுக்கு நடைபெற விருக்கின்றது.
யாழ். குடாநாடு தென்னிலங் கையின் பல்வேறு இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் உட்பட பெருந்தொகையானோர் ஆலயத் திருவிழாவுக்கு வருகை தருவரென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக் கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் பிரதேச செயலர், பாதுகாப்பு தரப்பினர், சுகாதாரப் பகுதியினர் பிரதேச சபையினர் கூட்டாக மேற்கொண் டுள்ளனர்.
இதேவேளை நயினாதீவு உற்சவத்துக்கென படகுகளில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு மிதப்பு அங்கி அணிவது அவசியமென கடற்படையினர் அறிவித் துள்ளனர். பாதுகாப்பு அங்கி அணியாமல் எவரும் பயணம் செய்ய முடியாதென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment