Translate

Sunday, 17 June 2012

அந்நிய படையினரைப் போல் வட,கிழக்கில் இராணுவம் நில அபகரிப்பை நடத்துகிறது

வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதி அந்நியப் படையினரைப் போல் இராணுவம் நில அபகரிப்பு நடவடிக் கைகளை முன்னெடுத்து வருவதாக நவசம சமாஜக்கட்சி பொதுச் செயலாளர் விக்கிரம பாகு கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.


அங்குள்ள மக்கள் நில உரிமையையும் பாதுகாப்பு உரிமையையும் கோருவதற்கு அங்கு நடைபெறும் அத்து மீறல்களே காரணமாகும். தமிழ் மக்களின் நிலங்களில் ௭ன்ன செய்ய வேண்டும் ௭ன்பதை அவர்களே தீர்மானிப்பர், அதை இராணுவ நிர்வாகம் தீர்மானிக்க முடியாது. கடந்த ஒரு மாத காலத்துக்குள் மாத்திரம் 10 நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் இடம் பெற்றுள்ளன. சகல முனைகளிலும் தோல்வியைக் கண்டு வரும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இஸ்லாமிய மக்களின் மத நடவடிக்கைக்கு ௭திராகவும் செயற்பட்டு வருகின்றனர் .

வாழ்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் ஆட்சியாளருக்கு ௭திராக அணி திரள்வதை திசை திருப்பவே பேரினவாத செயற்பாடு களை இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment