தமிழ்மக்களின் முதன்மை தலங்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காம முருகன்ஆலய வளாகத்தில் உல்லாச விடுதி அமைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.
கதிர்காம முருகன் ஆலய வளாகத்தில் நிலத்தினை கையகப்படுத்தி அங்கு உல்லாச விடுதிஅமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசின் கோரிக்கையினை இரத்து செய்யுமாறு நீமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கதிர்காம முருகன் ஆலயத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் நிலப்பரப்பினை கையகப்படுத்தி அங்கு விளையாட்டு திடல் உல்லாச விடுதிகளை அமைக்கும் முயற்சியினை சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது இதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் மேலதிக விசாரணையினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்து எதிர்வரும் மாதம் 12ஆம் நாள்வரை இந்த வழக்கினை ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment