Translate

Tuesday, 12 June 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் சகல முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியாது!


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண்கக்க ஆணைக்குழுவின் சகல முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஏனைய கட்சிகளின் கருத்துக்களையும் கோரியுள்ளோம்.
குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சில முன்மொழிவுகளை அமுல்படுத்த மூன்று மாத காலம் எடுக்கும் இன்னும் சில முன்மொழிவுகளை அமுல்படுத்த ஐந்து முதல் பத்து வருடங்கள் எடுக்கலாம்.
30 ஆண்டு கால போரை மறந்து விட்டு இறுதி இரண்டு வார போர் பற்றியே சர்வதேச சமூகம் கவலையடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எட்டப்படும் தீர்வானது காத்திரமானதாக அமையும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வு எட்டுவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை முக்கியமானது.
இந்தத் தீர்வுத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,…
குதிரையை நீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியும், எனினும், குதிரைக்கு நீரை ஊட்டிவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது, இதில் கலந்து கொள்வதும் கொள்ளாமல் விடுவதும் கூட்டமைப்பின் தீர்மானமாகும்.
கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு கூடுதல் முனைப்பு காட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment