கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் மூன்று இளம்பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
13 வயது முதல் 17 வயது வரையிலான இளம் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இவர்களை கடத்தி வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர்.
இந்த வேலைகளை செய்தது 15 வயதான இளம் பெண்கள் என்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
எனவே இந்த குற்றங்களை செய்த பெண்கள் மீது ஆட்கடத்தல், திருட்டு, அடைத்து வைத்தல், பாலியல் வன்முறை என்று பல குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஜான் மெக்கட்ரிக் என்பவர் கூறுகையில், தம் வயதுப் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் தனது மகளின் இந்தச் செயலைக் கேட்டு அதிர்ந்து போனார்.
கடந்த வாரம் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சரான விக் டோவஸ், ஆட்கடத்தலைத் தடுக்கப் புதிய சட்டம் கொண்டு வரப் போவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment