புலனாய்வுப் பிரிவு என்ற போர்வையில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் பணம் வழங்காவிட்டால் மகனை கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
குறித்த வர்த்தகரின் மகன் லண்டனில் கல்வி பயின்று வருவதாகவும் அவரது நண்பர்களே இந்தத் திட்டத்தை வகுத்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வர்த்தகரிடம் 50 லட்ச ரூபா கப்பமாக வழங்குமாறு கோரியுள்ளனர். இந்தப் பணம் ஸ்ரேலிங் பவுண்களாக வழங்கப்பட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளனர்.
புத்தளம் மற்றும் பொலறுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கப்பம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனிலிருந்தும் இலங்கையிலிருந்தும் கப்பம் கோரி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பம் கோரல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment