திரு பழனியப்பன் விசுவநாதன்
ஆரியத்தின் முகத்தை தோலுரித்து தமிழனுக்கு அவனது தன்மானத்தை மீட்டுத் தந்தவர் பெரியார்.
சாதி பேசித் தலை தாழ்ந்த தமிழனை தலை நிமிர வைத்தவர் பெரியார்.
பெரியார் இல்லை என்றால் தமிழன் இன்றும் வடமொழியை ஏற்று, பிராமணிய மேலாண்மையை ஏற்று,
ஒரு குலத்துக்கு ஒரு நீதி கூறிய மனுநீதியை ஏற்று நடைப்பிணமாக வாழ்ந்திருப்பான்.
தமிழறிஞர் கதிரைவேலனார் தமிழில் பெரும் புலவராக இருக்கலாம். ஆனால் சமற்கிருத மொழி தேவமொழி வழிபாட்டுக்கு உகந்த மொழி தமிழுக்கு அந்தத் தகுதி இல்லை என்ற சிந்தனை உடைய ஒருவர்.
பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனறு சொன்னதற்குக் காரணம் தமிழில் ஆங்கிலம் போல்
அறிவியல் தொடர்பான படைப்புக்கள் இல்லை எனபதால்தான்.
தமிழ்நாடு தமிழர்களுக்கே என்றும் இந்தி மொழியை பச்சைத் தமிழர் மாபொசி வரவேற்ற போது அதனை எதிர்த்துப் போராடியவர் பெரியார்தான்.
தமிழ்த் தேசியம் பேசுகிறீர்களே, யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று முரசு கொட்டிய பாரதியையும் பரிதிமாக்கலைஞரையும் உ.வே.சாமிநாதரையும் என்ன செய்ய உத்தேசம்?
தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் பொருள் ஒன்றுதான். தமிழை திராவிடம் என்று வடமொழியாளர் அழைத்தார்கள்.
தமிழை தாய்மொழியாக யார் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தமிழர்களே. திராவிடர்களே.
ஒருவன் எப்படி தமிழனாகவும் இந்தியனாகவும் இருக்க முடியுமோ அதே போல் தமிழன் தமிழனாகவும் திராவிடனாகவும் இருக்க முடியும்.
பெரியார் ஒரு சமூகப் போராளி. மூடநம்பிக்கைகளை தகர்த்து எறிந்த கடப்பாரை. பெரியாரின் போராட்டம் பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.
நயன்மைக் கட்சித் தலைவர், பொதுத்தேர்தலில் தோல்வி யடைந்தபின், இருக்குமிடந்தெரியாது ஓடி ஆங்காங்குப் பதுங்கிக் கொண்டனர்.அன்று பெரியார் ஒருவரே திரவிட-ஆரியப் போர்க்களத்திற் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாதுபோராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து கற்றோர்க்கும் தன்மான உணர்ச்சி ஊட்டி,பிராமணியத்தைத் தலைதூக்க வொண்ணாது அடித்துவீழ்த்தி, ஆச்சாரியார் கொண்டு வந்த இந்தியைஎதிர்த்துச் சிறைத்துன்பத்திற்கு ஆளாகியவர். குலக்கல்வியை எதிர்த்துப் போராடியவர். கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களைநடத்திவைத்தும், பகுத்தறிவியக்கத்தைத்தோற்றுவித்தும், மூடப் பழக்கவழக்கங்களையொழித்தும் வரலாற்றில் அழியாத இடம் பிடித்தவர்.
பெரியாரின் தொண்டு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்குவழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமானபக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும்வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்புவிளங்குகிறது.
பெரியாரை விமர்ச்சிப்பவர்கள் 10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க வேண்டும். இன்று சாதி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பகுத்தறிவு பேசுவது எளிது. அது பெரியாரால் வந்தது. சாதி, மதம், பாலினம், மூடநம்பிக்கை, வறுமை எனஅனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாரைத் தமிழினம் மறக்காது.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சொன்னார். “பாரதியை பார்ப்பான் என்பவனையும் பெரியாரைக் கன்னடன் என்பவனையும் கன்னத்தில் அறைவேன்!”
No comments:
Post a Comment