தென் ஆப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின், 94வது பிறந்த நாளையொட்டி, இன்று அந்நாட்டில்,
இரண்டு கோடி பேர் அவரது பிறந்த நாள் பாடல் பாடி, சாதனை படைக்க உள்ளனர்.தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி, பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இவரது போராட்டத்தின் பலனாக, தென் ஆப்ரிக்கா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. தென் ஆப்ரிக்க அதிபராக பதவி வகித்த மண்டேலா தற்போது, வயோதிகத்தின் காரணமாக அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டார்.
கேப் மாகாணத்தின் குனு என்ற தனது சொந்த ஊரில் அவர் தற்போது வசிக்கிறார்.இன்று, 94வது பிறந்த நாள் கொண்டாடும் மண்டேலாவுக்கு, வாழ்த்து கூறும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் காலை, 8 மணிக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து, மண்டேலாவுக்கு வாழ்த்து பாடல் பாட உள்ளனர். பள்ளி மாணவர்களுடன் மற்றவர்களும் சேர்ந்து மொத்தம், இரண்டு கோடி பேர் என்ற அளவில் வாழ்த்து பாடல் பாடி, உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்க மக்களின் சமூக நீதிக்காக அவர், 67 ஆண்டு காலம் உழைத்ததை நினைவு கூரும் வகையில், அவரது ஆதரவாளர்கள், 67 நிமிடங்கள் இன்று பொது சேவையாற்ற முடிவு செய்துள்ளனர்.மண்டேலாவின், 94வது வயதையொட்டி, பல வங்கிகள் 94 கால்குலேட்டர்கள் வழங்குகின்றன. ஜேம்ஸ் டெலானே என்ற ஓவியர், 5,000 தேநீர் கோப்பைகளை கொண்டு, மண்டேலாவின் உருவத்தை வரைந்துள்ளார். உலகம் முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டாலும், அவர் எந்த விழாவிலும் பங்கேற்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment