Translate

Thursday 26 July 2012

உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது


லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை லண்டன் வர இருப்பதாக பிரித்தானியாவின் "The Independent " நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அவரது வருகையினை எதிர்த்து Aspen வீதிலுள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன ஒன்றுகூடலில், பிரித்தனியாவின் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:




ஏற்கனவே இரண்டு முறை போர் குற்றவாளி மஹிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய வருகையினை முறியடித்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் மக்களுக்கு சவால் விடுக்கும் வகையில் நாளைய ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அவர் லண்டன் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது பலத்தை வெளிப்படுத்தி அவரை விரட்டி அடிக்கும் வரலாற்று கடமையை எதிர்கொண்டு நிற்கின்றனர்.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நாளைய ஆரம்ப நிகழ்வுகளில் ஏராளமான நாடுகளின் சுமார் 150 உலக தலைவர்கள், ஆயிரக்கணக்கான ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகள் ஆரம்பவிழாவுக்கு செல்ல இருப்பதால் அவர்கள் பயணம் செய்யும் Aspen வீதியில் உள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக (Opposite the Fish Market, E14 5ST ) நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்

No comments:

Post a Comment