
மட்டக்களப்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே அச்சுறுத்தல்கள் ஆரம்பமானதாக த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிநிதிகள் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியதையடுத்து, விரைவில் மேற்படி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் இணக்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கவின் தேர்தல் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இது தொடர்பாக கூறுகையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் இவ்விடயம் குறித்து தான் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment