Translate

Tuesday, 17 July 2012

கோயிலில் பாதணிகளை சுத்தம் செய்தமைக்காக பாக்.பிரதி சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் _


  சீக்கியர்களின் புனிதக் கோயிலாகக் கருதப்படும் அமிர்தசரஸில் பாதணிகளை சுத்தம் செய்த பாகிஸ்தானின் பிரதி சட்டமா அதிபருக்கு அந்நாட்டு வழக்கறிஞர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் பிரதி சட்டமா அதிபர் குர்ஷித் கான். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த போது, பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று தரிசித்தார். 



பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குச் சென்று, செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக பக்தர்களின் செருப்பு மற்றும் ஷூக்களைத் துடைத்தார்.குர்ஷித் கானின் இந்தச் செயலுக்கு, பாகிஸ்தான் உயர் நீதிமன்றம், பார் கவுன்சில் ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.

"வெளிநாட்டுக் கோவிலுக்குச் சென்று அங்கு பாதணிகளைத் துடைத்தது, பாகிஸ்தானை அவமதிக்கும் செயல். பிரதி சட்டமா அதிபராக பதவி வகிக்கும் அவருக்கு இது தொடர்பாக அரசு தான் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அரசு நோட்டீஸ் அனுப்பாத காரணத்தால் நாங்கள், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்" என பார் கவுன்சில் தலைவர் யாசின் ஆசாத் கூறியுள்ளார்.

இது குறித்து குர்ஷித் கான் குறிப்பிடுகையில், "பார் கவுன்சில் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் தகுந்த பதிலடி கொடுப்பேன். நான் இந்தியா சென்ற போது, அந்நாட்டின் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. பஞ்சாப் மாநில அரசு என்னைக் கௌரவ விருந்தினராக அறிவித்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப் போல, நான் எந்த இந்தியரையும் கொல்லவில்லை. மாறாக, சீக்கியர்கள் போற்றும் சேவையைத் தான் செய்திருக்கிறேன். இது, பாகிஸ்தானை எந்த விதத்திலும் அவமதித்ததாகாது' எனத் தெரிவித்துள்ளார். __

No comments:

Post a Comment