கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் சொல்லுக்கு அடிபணிந்து செயலாற்றும் முதலமைச்சர் எமக்குத் தேவையில்லை. இறைமை என்பது தனியொரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதொன்றல்ல. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது.
இறைமையின் பங்காளர்களாக அனைத்து மக்களும் வாழக் கூடியதான ஆட்சியை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். தமது பாரம்பரிய வாழ்விடங்களில் ஒவ்வொருவரும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்றவாறு இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் அடிமைகளாகவோ இரண்டாந்தரப் பிரஜைகளாகவோ தங்களின் பாரம்பரிய இடங்களில் வாழ்வதற்கு தயாரில்லை. இதனை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் உறுதிபடக் கூறுவதாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வழங்கும் தீர்வு அமைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment