Translate

Wednesday 18 July 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னயின் கவனயீர்ப்பு போராட்டம்; திட்டமிட்டபடி நடைபெற்றது


தமிழ் தேசிய மக்கள் முன்னயின் கவனயீர்ப்பு போராட்டம்; திட்டமிட்டபடி நடைபெற்றது
news
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் படுகொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று 11 மணியளவில் நடைபெற்றது. 
 
இதன் போது இராணுவப் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தை குழப்ப பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை திட்டமிட்டபடி  போராட்டம் நடைபெற்றது.
 
இதில் நூற்றுக் கணக்கிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 
 
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை மனிதர்களாக நடத்துவதோடு அவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
போராட்டத்தில் த.தே.கூ, தமிழ் தேசிய முன்னணி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது தமது எதிர்பை வெளிப்படுத்தினர்.
 
இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் புலிக்கொடிளை தாங்கிவாறு 4 பேர் நெல்லியடி பஸ் நிலையப்பகுதியில் சுற்றித்திரிந்தனர்.
 
இவர்களது மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்திலும் பின்னனால் இருந்தவரிடமும் புலிக்கொடி இருந்தது. அவர்கள் சாதாரணமாகவே திரிந்தனர்.
 
சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் பிரசன்னம் அதிகமாக இருந்த போதும் குறித்த நபர்கள் சுற்றித்திரிந்ததைக் காணமுடிந்தது.
 
அத்துடன் வல்லை இராணுவ காவலரனில் பயணிகள் பஸ்களை மறித்த இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் இன்றைய தினம் மிரட்டி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment