15-09-2012 அன்று பிரித்தானிய இளையோர் அமைப்பினால் நடத்தப்படவுள்ள “இளந்தளிர் 2012”
எதிர்வரும் Sept 15 ஆம் திகதி சனிக்கிழமை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் “இளந்தளிர் 2012” எனும் கலை நிகழ்ச்சி மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் Oakington Manor School, Wembley, HA9 6NF இல் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் தமிழ் இனப்படுகொலை காரணமாக எங்கள் தேசிய அடையாளங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றும் விதமாக இந்த வருட இளந்தளரின் கரு “ஈழத் தமிழ் அடையாளம்” ஆக அமைகின்றது.
ஈழத்தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் கொண்டாட்டமாக அமையும் “இளந்தளிர் 2012” இல் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோரின் நடனம், பாடல், கவிதை, பேச்சுக்கள் மற்றும் நாடகம் ஆகியன உள்ளடங்கி உள்ளது.
“இளந்தளிர்” நிகழ்ச்சி 2005, 2006, 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டு வந்த வருடாந்த நிகழ்ச்சி.
2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களின் குரல்களை ஒன்றிணைத்து வருகின்றது. பிரித்தானிய தமிழ் சமூகம், உலகளாவிய ஈழத்தமிழ் தேசியம் மற்றும் எங்கள் தாய்நாட்டை மேம்படுத்துவதன் மூலம் பிரித்தானிய தமிழ் இளையோர் தங்களை மேம்படுத்த ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு சந்தர்ப்பம் அளிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரித்தானியா வாழ் மக்கள் கலந்து கொண்டு வளர்ந்து வரும் இந்த அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் படி வேண்டுகின்றனர் ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர்.
2011 Tamilnet coverage: http://tamilnet.com/...=13&artid=34099
நன்றி
தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்
சஞ்சய்
http://www.eeladhesa...chten&Itemid=50

No comments:
Post a Comment