Translate

Thursday 16 August 2012

பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்க. ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்.


 

பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்க. ஈழத்  தமிழர்கள் பட்டினிப் போராட்டம்.


பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள தமிழீழ அகதிகள் எட்டு பேர்களும் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சந்திரகுமார், பரமேஸ்வரன், பகீரதன், பிரதீபன், கங்காதரன், தங்கரூபன் , ஜெயமோகன் , செந்தூரன் ஆகிய எட்டு பேர்களும் இன்று ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மிகக் கொடூரமான சூழ்நிலையில் , மிருகங்கள் கூட இந்த முகாமில் இருக்கத் தயங்கும் இந்த பூந்தமல்லி  சிறப்பு முகாமில் இருந்து அனைவரும் விடுதலை பெற்று திறந்த வெளி முகாமிற்கு மாற்றப் படவேண்டும் என கோரிக்கை வைத்து இந்த பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் அரசு அதிகாரிகள் இவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்க வில்லை. எந்த அரசு அதிகாரிகளும்  இந்த போராட்டத்தை நிறுத்திவைக்க பேச்சு வார்த்தைக்கு வராததால் இந்த பட்டினிப் போராட்டத்தை தொடர உள்ளனர் முகாம் வாசிகள். 

இதில் செந்தூரன்  என்பவர் மட்டும் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், இதோடு அவர் தொடர்ந்து 7 ஆவது நாளாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 

இதே போல் ஒரு மாதத்திற்கு முன்பு  செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யவேண்டும் என காலவரையற்ற உண்ணாநிலை  போராட்டம் நடத்திய முகாம் தமிழர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்பதும் நினைவு கூறத் தக்கது. 



செந்தூரன் 


செந்தூரனுடன்  வழக்கறிஞர் புகழேந்தி  உரையாடுகிறார் 

No comments:

Post a Comment