சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவும் சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.
No comments:
Post a Comment