Translate

Thursday 16 August 2012

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சி அனைவரும் பொறுமை காப்போம் என்கிறார் ஹக்கீம்

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சி அனைவரும் பொறுமை காப்போம் என்கிறார் ஹக்கீம்
news

உன்னிச்சை சம்பவத்தின் மூலம் இரு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை இந்தக் காலகட்டத்தில் உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கக்கூடும் என்று அச்சம் காணப்படுகின்றது. இதற்கு இரண்டு சமூகங்களும் துணை போய்விடக்கூடாது. 
 
பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் நாம் இருக்கவேண்டும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உன்னிச்சை, பாவற்கொடிச்சேனை கிராமத்தில் தீக்கிரை யாக்கப்பட்ட பள்ளிவாசலை நேரடியாகச் சென்று பார்வையிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
உன்னிச்சைக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டோம். முஸ்லிம்கள் உன்னிச்சையில் மீள்குடி யேறுவதைத் தடுப்பதற்காகவே உன்னிச்சை பள்ளிவாசலுக்கு தீவைத்தும், முஸ்லிம் பெண் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியும் உள்ளனர்.
 
இங்குள்ள நிலைமையை இராணுவத்தினர் சமுகமான நிலைமைக்குக் கொண்டுவந்துள்ளனர். தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளிவாசலைத் தற்காலிகமாக இராணுவத் தினர் புனரமைத்துள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி இங்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளோம்.
 
இங்கு மீள்குடியேறியுள்ள 29 குடும்பங்களுக்கான கொடுப்பனவு ஏற்பாடுகள் தொடர்பில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான பத்திரங்கள் ஏற்கெனவே இங்கிருக்கின்ற பிரதேச செயலாளரிடம் கொடுக்கப்பட்டும், இவர்களுக்கான நிதியை பெற்றுக்கொடுக்க இங்குள்ள பிரதேச செயலாளர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். 
 
இந்த அசம்பாவிதங்களில் ஈடுபடுகின்ற இந்தச் சுற்றுப்புறத்திலுள்ள ஒரு சிலர்,  உன்னிச்சையில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களை அடிக்கடி அச்சுறுத்திவந்த நிலையி லேயே அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
 
உன்னிச்சை முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அரச தரப்பிலே இருக்கின்ற தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களிடம் கலந்துரையாடவுள்ளேன் என்றார். 

No comments:

Post a Comment